பைசர் நிறுவனத்தின் கொரோனாவுக்கு எதிரான மாத்திரையை தென் கொரியா இறக்குமதி செய்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பைசர் நிறுவனம் கொரோனாவுக்கு எதிராக செயல்படக்கூடிய paxlovid என்னும் மாத்திரையை கண்டறிந்துள்ளார்கள். இந்த மாத்திரை கொரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை 90% வரை கம்மிப்படுத்துவதாக கருதப்படுகிறது.
இந்நிலையில் இந்த paxlovid மாத்திரைகளை தென் கொரிய அரசாங்கம் இறக்குமதி செய்துள்ளதாக அந்நாட்டின் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அவ்வாறு இறக்குமதி செய்த அந்த மாத்திரைகளை நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கும், 65 வயதிற்கு மேலானவர்களுக்கும் வழங்க திட்டமிட்டுள்ளதாக தென் கொரிய நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.