இறுக்கமாக ஜீன்ஸ் அணிவதால் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள்.
தற்போதைய காலகட்டத்தில் ஆண் பெண் என இருவரும் ஜீன்ஸ் அணிவது வழக்கம் தான். ஆனால் அவ்வாறு ஜீன்ஸ் அணிவதால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்ளுங்கள். பெண்கள் இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்களை அணிவதால் பல உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. அதிலும் குறிப்பாக ஜீன்ஸ் அணிவதால் கால்களுக்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்படுகிறது.
அதனைப்போலவே முதுகு வலி, நரம்பு பாதிப்பு, மயக்கம் மற்றும் கரு உருவாமை ஆகிய பிரச்சனைகள் உருவாகிறது. வேலூர் நடுத்தர வயதினர் ஜீன்ஸ் அணிவதால் அவர்களது ஜீரண செயல்பாடுகள் குறையும் என ஆய்வுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. இடுப்பு பகுதி தொடர்ந்து இழுக்கப்படுவதால் அவர்கள் முதுகு எலும்பு பாதிப்பிற்கு உள்ளாகிறது. அந்த உடை தொடர்ந்து உடலை இருப்பதால் சருமத்தில் காற்று படாமல் உடலில் வியர்வை தேங்கி கிருமித்தொற்று உருவாகும்.
அதனால் வேர்க்குரு உஷ்ணக் கட்டிகள் மற்றும் கோடைக் கால நோய்கள் சருமத்தைப் பாதிக்கும். மேலும் உடலில் துர்நாற்றம் வீசுவதோடு படை சொறி சிரங்கு அரிப்பு போன்றவை வரும். இதனையடுத்து ஆண்கள் ஜீன்ஸ் அணிவதால் விதைப்பைகள் பாதிக்கப்பட்டு, விந்தணு உற்பத்தியை குறைக்க படுவதோடு நெஞ்செரிச்சல் அதிகரிக்கும். தொடைத் தசைகளும் தோலும் பாதிக்கப்பட்டு கால் நரம்புகளின் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு தசைகளும் பாதிக்கப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் இனி இறுக்கமான ஜீன்ஸ் அணிவதை ஆண் பெண் இருபாலரும் தவிர்ப்பது மிகவும் நல்லது.