Categories
சினிமா தமிழ் சினிமா

இறுதிகட்ட படப்பிடிப்பில் ‘பிசாசு- 2’… வெளியான லேட்டஸ்ட் தகவல்…!!!

பிசாசு- 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பிசாசு. திகில் கதையம்சம் கொண்ட இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. மிஷ்கின் இயக்கும் இந்த படத்தில் ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் விஜய் சேதுபதி, பூர்ணா, நமீதா கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

Mysskin pisasu 2 shooting ends quickly

இந்த படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் பிசாசு- 2 படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வருகிற ஆகஸ்ட் 18-ஆம் தேதியுடன் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிடும் என கூறப்படுகிறது.

Categories

Tech |