திருநெல்வேலி மாவட்டத்தில் வாலிபரின் மீது மோதிய பஸ்ஸினுடைய கண்ணாடியை அவரது உறவினர்கள் உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் செல்வகணேஷ் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் தனது உறவினருடைய இறுதி சடங்கிற்காக ஊர்வலத்தில் கலந்துகொண்டு, அதனுடைய பின்னாலேயே தன்னுடைய பைக்கில் சென்றார். அப்போது தனியார் பஸ் அவருடைய பைக்கின் மீது மோதியதால் அவர் பஸ்ஸினுடைய முன்பக்கத்தில் சிக்கி காயமடைந்தார்.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள் பேருந்தின் ஓட்டுநருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சில நபர்கள் திடீரென்று பேருந்தின் மீது கல்லை வீசி தாக்கியதால் அதன் முன் பக்கத்திலிருந்த கண்ணாடி உடைந்து சிதறியுள்ளது. இச்சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் செல்வகணேஷ் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.