காவலரை மிரட்டி பணி செய்யாமல் தடுத்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் எஸ்.புதூர் அடுத்துள்ள வலசைபட்டி பகுதியில் மூதாட்டியின் இறுதிசடங்கில் தகராறு நடப்பதாக புழுதிபட்டி காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறை அதிகாரி வினோத் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளார். அங்கு அதே பகுதியை சேர்ந்த செல்வம், சுப்பிரமணியன் மற்றும் அவரது மகன் சந்திரசேகர் ஆகியோர் தகராறில் ஈடுபட்டிருந்துள்ளனர். இதனையடுத்து காவலர் வினோத் தகராறில் ஈடுபட்டவர்களை கண்டித்துள்ளார்.
அப்போது அவர்கள் 3 பேர் இணைந்து காவல்துறை அதிகாரிய தகாத வார்த்தையால் பேசியும், கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து புழுதிபட்டி காவல்துறையினர் செல்வம், சுப்பிரமணியன் மற்றும் சந்திரசேகரன் மீது வழக்குபதிவு செய்து சுப்பிரமணியன், சந்திரசேகரனை கைது செய்து பரமக்குடி சிறையில் அடைத்துள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள செல்வத்தை தேடி வருகின்றனர்.