மத்திய பிரதேச மாநிலத்தில் நர்மதா ஆற்றில் நீர் கரைபுரண்டு ஓடுகிறது இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 55 வயதான விஷமத் என்பவர் உயிரிழந்தார். இவரின் உடலை இடுகாட்டுக்கு கொண்டு செல்வதற்கு ஒரு சிக்கல் எழுந்தது.
அதாவது இடுகாட்டுக்கு செல்லும் ஒரே ஒரு சாலையில் மழை வெள்ளத்தால் மூடப்பட்டுள்ளது. இதனையடுத்து அவரின் உடல் இறுதிச் சடங்கிற்காக உடலை ரப்பர் டியூப்பில் கட்டி மிதக்கவிட்டு இழுத்து வரப்பட்டது. இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இது குறித்து விசாரணை நடத்துவதாக கிராம நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Absence of bridge-proper connect road forced villagers to tie a man's body to a floating rubber tube to cross flooded Narmada river between 2 villages of Dindori and Anuppur districts of MP. Body's last rites were performed later. @NewIndianXpress@TheMornStandard@santwana99 pic.twitter.com/bDYcbDJZkt
— Anuraag Singh (@anuraag_niebpl) August 16, 2022