இறந்த நபரே தனது இறுதிச்சடங்கிற்கு தேவாலயத்திற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ள சம்பவம் வேடிக்கையாக உள்ளது.
டிரினிடாட் நாட்டில் தேவாலயத்தில் நடந்த இறுதிசடங்கிற்காக சென்ற ஒருவரை உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதில் என்ன வேடிக்கை என்றால் யாருக்காக இறுதிச்சடங்கு நடக்கிறதோ அவரையே உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை என்பது தான் சுவாரஸ்யம். இதில் இளஞ்சிவப்பு சட்டையும், வெள்ளை நிற முழுக்கால் சட்டையும் அணிந்து நாற்காலியில் அமர்ந்திருக்கும் நபரின் பெயர் Lewis(29). இவர் உண்மையிலேயே உயிருடன் இல்லை. அவர் தற்போது ட்ரெண்டாகி வரும் Extreame Embalming என்ற ஒரு விஷயத்தின் மூலம் இப்படி இருக்கிறார்.
இறந்தவர் எந்த நிலையில் இருக்க வேண்டுமோ, அதே நிலையில் அவரை உட்காரவோ அல்லது படுக்கவோ வைத்து அவரது உடலுக்குள் ஒரு ரசாயனத்தை செலுத்தும்போது, அந்த ரசாயனம் இறந்த உடலை அப்படியே இறுக்கமாக வைத்துக் கொள்ளும். அப்படித்தான் இவரும் நாற்காலியில் உட்கார வைக்கப்பட்ட நிலையில் இருக்கிறார். இதையடுத்து உயிருடன் தத்ரூபமாக நாற்காலியில் அமர்ந்திருக்கும் இவரை பார்த்து இவரின் இறுதிச்சடங்குக்கு வந்தவர் ஒருவர், Lewisம் இறுதிச்சடங்கிற்கு வந்தவர் என்று எண்ணி அவரிடம் போய் மாஸ் கூட போடாமல் வந்திருக்கிறீர்கள் என்று கேட்டுள்ளனர்.
ஆகவேதான் மாஸ்க் அணியாத அவரது உடலை தேவாலயத்திற்குள் இறுதிச்சடங்கிற்காக கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. Lewis மற்றும் அவரின் தந்தை இருவரும் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், Lewis குடும்பத்தார் தன்னுடைய மகனுக்கு வித்தியாசமாக இறுதிச்சடங்கு செய்ய முடிவு எடுத்ததால் தான் இந்த குழப்பம் நடந்துள்ளது. இதற்கிடையில் இறந்த உடலை இப்படி தவறாக நடத்த கூடாது என்று தேவாலயத்தில் உள்ள பாதிரியார்கள் கூறியுள்ளனர். மேலும் இறந்தவரை ஆபத்தான முறையில் கொண்டு செல்வது குற்றம் என்று கூறிய காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
வீடியோவை காண:
blob:https://www.thesun.co.uk/174727aa-6fee-4023-80b2-03bcf3670edc