இறுதிச் சடங்கின் போது நடந்த துப்பாக்கி சூட்டில் ஆறு பேர் படுகாயம் அடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்க நாட்டில் பென்சில்வேனியா மாகாணத்தில் கடந்த 15ஆம் தேதி திடீரென துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். இதில் உயிரிழந்த ஜான் ஜேம்ஸ் என்பவருடைய இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் பீட்டர் பார்க்ஸ் நகரில் உள்ள ஒரு தேவாலயத்திற்கு வெளியே நடைபெ ற்றுள்ளது. அங்கு ஜான் ஜெம்ஸின் உறவினர்களும் நண்பர்களும் குழுமி இருந்தனர். அந்த சமயத்தில் அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் தருமாறியாக சுற்றுள்ளார்.
இதனால் இறுதி சடங்கில் பங்கேற்ற அனைவரும் அலறியடித்துக் கொண்டு தங்களின் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடியுள்ளனர். இருப்பினும் ஆறு பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்தது. இதற்கிடையில் துப்பாக்கி சூடு சத்தம் கேட்டதும் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போலீசார் உடனடியாக தேவாலயத்திற்கு விரைந்துள்ளனர். ஆனால் அதற்குள் தாக்குதல் நடத்திய மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இதனை அடுத்து துப்பாக்கி சூட்டில் காயம் அடைந்த ஆறு பேரையும் போலீசார் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். மேலும் தாக்குதல் நடத்திவிட்டு தப்பி ஓடிய மர்ம நபரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.