Categories
தேசிய செய்திகள்

இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகளை செப் 30 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும்..யுஜிசி சுற்றறிக்கை..!!

கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான இறுதியாண்டு பருவத் தேர்வுகளை இந்த மாதம் 30 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் யுஜிசி சுற்றறிக்கை விடுத்துள்ளது.

கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. இந்நிலையில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு அனைத்து மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக பல மாநிலங்களிலும் தமிழகத்திலும் அறிவிக்கப்பட்டன.  இவற்றிலும் இறுதி  ஆண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் கட்டாயமாக நடத்தப்படும் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகியிருந்தது. இறுதியாண்டு தேர்வு மாணவர்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வழிவகுக்கும் என்பதால் இத்தேர்வினை ரத்து செய்ய இயலாது என்று யுஜிசி முன்னதாகவே அறிவுறுத்தியிருந்தது.

இதனால் பல்வேறு மாநிலங்களில் யுஜிசி உத்தரவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மாணவர்கள் வழக்குகளை தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு செமஸ்டர் தேவை ரத்து செய்ய இயலாது என்றும் இத் தேர்வினை  நடத்துவதற்கு யுஜிசி தடை எதுவுமில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.  இத்தேர்விற்கு  யுஜிசி தான் முழு அதிகாரம் என்பதால்  அவர்களின் முடிவே இறுதியானதாகும் என்றும் தெரிவித்தனர்.  இறுதியாண்டு தேர்வு மிக முக்கியமானது என்பதால் அதனை கண்டிப்பாக  நடத்த வேண்டும் என்றும் அதில் வரும் மதிப்பெண்கள் மூலமே மாணவர்கள் உயர் படிப்புக்கு செல்ல முடியும் என்றும் கூறுகின்றனர்.

 மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு தேர்வை நடத்த வேண்டும் என்று யுஜிசி கூறியது சரியானது என்று நீதிபதி தீர்ப்பை வழங்கினார் மேலும் உச்ச நீதிமன்றத்தில் இது குறித்து மேல்முறையீடு செய்த மனுக்களும்  தள்ளுபடி செய்யபட்டன.  இந்நிலையில் யுஜிசி அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வுகள் செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |