Categories
உலக செய்திகள்

இறுத்திச்சடங்கில் உக்ரைன்-ரஷ்யா…. பாதிரியார்களுக்கிடையில் நடந்த மோதலால் பரபரப்பு….!!

உக்ரைன் நாட்டில்  Tomashpil என்ற இடம் அமைந்துள்ளது. இந்த இடத்தில் நடந்த போரின் போது Oleksandr Ziniv என்பவர் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 42 ஆகும். உக்ரைன் வீரரான        Oleksandr Ziniv-வுக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது. அவரது இறுதிச்சடங்கின்போது உக்ரைன் பாதிரியாரான Father Anatoly Dudko என்பவர் உரையாற்றியுள்ளார். அப்பொழுது அவரது உரையின்போது ரஷ்யாவுக்கு எதிராக, குறிப்பாக, மக்கள் ரஷ்ய திருச்சபையை புறக்கணிக்க வேண்டும்  என்று வலியுறுத்தியபடி உரையாற்றினார். இறுதிச்சடங்கின்போது இப்படியெல்லாம் பேசவேண்டாம் என பலரும் கூறியும் Father Anatoly தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.

அதே சமயத்தில் அந்த இறுதிச்சடங்கில் ரஷ்ய திருச்சபையின் பாதிரியாரான Father Mykhailo Vasylyuk என்னும் ரஷ்யரும் பங்கேற்றிருக்கின்றார். Father Anatolyயின் பேச்சு வார்த்தை கோபத்தை  ஏற்படுத்தியது. அப்பொழுது அவர்  மீது பாய்ந்த Father Mykhailo, தன் கையிலிருந்த சிலுவையாலேயே அவரைத் தாக்கினார். அந்த சமயத்தில் இருவருக்கும்  கைகலப்பு ஏற்பட, அங்கிருந்த இராணுவ படை வீரர்கள் உட்பட மற்றவர்கள் வந்து இருவரையும் பிரித்துவிடவேண்டிய நிலைமை உருவாக்கியுள்ளது. மேலும் இறுதிச்சடங்கில் இப்படி இரு நாட்டு பாதிரியார்களும் மோதிக்கொண்ட விடயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை  துவங்கியுள்ளதாக கூறப்படுகின்றது.

Categories

Tech |