Categories
தேசிய செய்திகள்

இறைச்சிக்காக வெட்டிய போது… மீனின் வயிற்றுக்குள் இருந்த…”முழு பிளாஸ்டிக் பை”… இது பெரிய ஆபத்து..!!

பெங்களூருவை அடுத்த மங்களூருவில் இறைச்சிக்காக வெட்டப்பட்ட மீனில் ஒரு முழு பிளாஸ்டிக் பை இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலம் மங்களூருவில் மீன் கடை ஒன்றில் கடை உரிமையாளர் ஒருவர் இறைச்சிக்காக மீனை வெட்டியுள்ளார். அதில் ஒரு முழு பிளாஸ்டிக் பை இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். அந்த மீன் முரு  வகையை சேர்ந்தது. அதன் எடை 10 கிலோ இருக்கும். இதனை கடை உரிமையாளர் படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து பேசிய மீன்வளக் கல்லூரி தலைவர்  செந்தில்வேல் நுண் அளவிலான  பிளாஸ்டிக் பையை சாப்பிட்ட மீன்களை பார்த்திருக்கிறோம். ஆனால் ஒரு மீனுக்குள் முழு பிளாஸ்டிக் பை இருப்பது இப்போதுதான் பார்க்கின்றேன் என்று தெரிவித்தார். மேலும் கடலில் இப்போது பிளாஸ்டிக் பைகள் நிறைந்துள்ளது. இதனால் மீன்கள் அதனை உண்பதால் ஆபத்து ஏற்படுகின்றது. மேலும் மீனவர் வலையில் நிச்சயம் 40 விழுக்காடு பிளாஸ்டிக் பை கிடைக்கின்றது.   கடலுக்கு அடியில் உள்ள உயிரினங்களுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும். இதை தடுக்க மாவட்ட நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அவர் தெரிவித்தார்.

Categories

Tech |