Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

இறைச்சியில் புழுக்கள் கிடந்ததால் பரபரப்பு…. உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் விசாரணை…!!!

இறைச்சியில் புழுக்கள் கிடந்த சம்பவம் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நீலகிரி மாவட்டத்திலுள்ள பாட்டவயல் பகுதியில் நெஸ்னா என்பவர் வசித்து வருகிறார். இவர் கூடலூர் பழைய பேருந்து நிலையத்தில் இருக்கும் கடையில் மாடு இறைச்சி வாங்கி சென்றுள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு சென்று பார்த்தபோது இறைச்சியில் புழுக்கள் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட கடை நிர்வாகத்திடம் பேசிய போது அவர்கள் உரிய பதில் அளிக்கவில்லை. இதனால் நெஸ்னா மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட கடைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |