Categories
மாநில செய்திகள்

இறைச்சி கடைக்காரர்கள் கவனத்துக்கு….  அதிரடி போட்ட அதிரடி உத்தரவு….!!!!

உரிமம் இல்லாத இறைச்சிக் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது .

நாகப்பட்டினம் மாவட்டம், பனகல் கிராமத்தில் முகமது அலி என்பவர் உரிமம் இல்லாமல் இறைச்சிக்கடையில்  ஆடு, கோழி வெட்ட படுவதாக அந்த கிராமத்தை சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்தார். விலங்குகள் வெட்டப்படுவதை முறைப்படுத்தும் விதிமுறைகளை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் அவர் கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த எஸ் எம் சுப்ரமணியம் உரிமம் இல்லாமல் ஆடு, கோழிகள் வெட்டப்படுவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளார்களா என தெரிவிக்காததில் இருந்து, இந்த விதிகள் அமல்படுத்தப்படவில்லை என்றே கருத வேண்டியுள்ளது. இவற்றை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இந்த விதிகளை  அமல்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப, ஊரக வளர்ச்சி இயக்குனருக்கு உத்தரவு பிறப்பித்து நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.

Categories

Tech |