Categories
தேசிய செய்திகள்

இறைச்சி தொழிற்சாலையில் அம்மோனியா வாயு கசிவு…. 50 பேருக்கு நேர்ந்த சிரமம்…. வெளியான தகவல்….!!!!

உத்தரபிரதேசத்தின் ரோராவர் பகுதியில் இறைச்சி தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. இவற்றில் பொருட்களை பேக்கிங் செய்யும் பிரிவில் அதிகளவில் பெண்கள் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்நிலையில் ஆலையில் திடீரென்று அம்மோனியா வாயுகசிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக  பணியிலிருந்த தொழிலாளர்கள் பலருக்கு மூக்கு, தொண்டை பகுதியில் கடும் எரிச்சல் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சிலருக்கு சுவாசிப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து 50 பேர் வரை மீட்கப்பட்டு அருகே உள்ள மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்போது அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் அவர்கள் அனைவரின் உடல் நிலையும் சீராக இருக்கிறது என அலிகார் மாவட்ட மாஜிஸ்திரேட் கூறியுள்ளார். இருப்பினும் மருத்துவமனையில் எதிர்பாராத சம்பவம் எதுவும் நடைபெறாமல் இருப்பதற்கு போலீசார் படை குவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாயு கசிவுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது.

Categories

Tech |