நாம் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் மீதம் இருப்பதை எடுத்து பிரிட்ஜில் வைக்கும் பழக்கத்தை கொண்டிருக்கிறோம். அந்தவகையில் மீன் மற்றும் இறைச்சி பொருட்களை வைக்கும் பொது சில பக்குவமான முறைகளில் வைத்தல் தான் கெட்டுப்போகாது. எனவே இப்பொழுது எப்படி இறைச்சி வகைகளை பிரிட்ஜில் வைப்பது என்று பார்க்கலாம். இறைச்சி மற்றும் மீனை பாலிதீன் கவர்களில் வைத்து பிரிட்ஜின் உள்ளே வைக்க வேண்டும்.
சமைக்காத அசைவ பொருளையும், சமைத்த அசைவ பொருளையும் சேர்த்து வைக்ககூடாது. சமைக்காத இறைச்சியை மூன்று அல்லது நான்கு நாட்கள் பிரிட்ஜில் வைத்து அதை டிபுரோஸ்ட் செய்ய பிரிட்ஜின் உள்ளேயே வைப்பது நல்லது. அதாவது பிரிட்ஜில் இருந்து எடுத்து பிரிட்ஜின் அடியில் உள்ள அறையில் 24 மணி நேரம் வைத்திருந்தால் டிபுரோஸ்ட் ஆகிவிடும். பிரிட்ஜில் இருக்கும் இறைச்சியை அப்படியே எடுத்து சுடுநீரில் அல்லது குளிர்ச்சியை குறைக்க வெகுநேரம் வெளியே எடுத்து வைத்தால் அந்த உணவுப் பொருள் கெட்டுப் போக வழிவகுக்கும்.