Categories
மாநில செய்திகள்

இறைச்சி, மீன் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதி – அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை  தீவிரமாக பரவி வரும் நிலையில், தளர்வுகளற்ற  முழு ஊரடங்கு ஜூன்- 7ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்த ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் சில மாவட்டங்களில் தொற்று பாதிப்பு குறைந்துள்ளது. இருப்பினும் கோவை உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை இன்னும் குறையவில்லை.

இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஒரு வாரத்திற்கு அதாவது ஜூன் 7-ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை சில தளர்வுகள் உடன் முழு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், கரூர், நாமக்கல், தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள காரணத்தால் கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதில் இறைச்சி கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும். மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மிதிவண்டி மற்றும் இரு சக்கர வாகனங்கள் பழுது நீக்கும் கடைகள் மட்டும் (விற்பனை நிலையங்கள் அல்ல) காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும்.

Categories

Tech |