Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இறைச்சி விலை அதிகரிப்பால்…. ஆடு வளர்ப்பில் பொதுமக்கள் ஆர்வம்…. எடை அதிகரிக்க சிறப்பு தீவனம்….!!

சமீப காலங்களில் இறைச்சி விலை அதிகரித்து வருவதால் ஆடுகள் வளர்ப்பதில் பொதுமக்கள் அதிக நாட்டம் காட்டி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ஏர்வாடி, பிரப்பன்வலசை, கொம்பூதி, தேர்போகி, சடைமுனியன் வலசை மற்றும் கடலோர கிராமங்களில் வசிக்கும் மக்களுக்கு பிரதான தொழிலாக மீன்பிடித்தல் மற்றும் விவசாயம் என இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது சமீப காலமாக ஆட்டு இறைச்சியின் விலை உயர்ந்து வருவதால் கூடுதலாக ஆடுகளையும் அதிகளவில் வளர்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து பண்டிகை தினங்களில் ஆடுகளின் தேவையும் அதிகரித்து வரும் நிலையில், இந்த காலகட்டத்தில் வாரத்தில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது இறைச்சியை உணவில் சேர்ந்து கொள்ளும் பழக்கமும் அதிகரித்துள்ளது. இதனால் 1 கிலோ இறைச்சி கிலோவிற்கு 800 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. எனவே பொதுமக்கள் தற்போது வீடுகள் தோறும் ஆடுகளை வளர்ந்து வருகின்றனர். மேலும் ஆடுகள் அதிக எடை வரவேண்டும் என்பதற்காக தீவனத்திற்கு சோளம், அகத்திக்கீரை போன்றவையும் வழங்குகின்றனர்.

Categories

Tech |