குடிபோதையில் கணவர் மனைவியை அரிவாளால் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள ஒகளூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான ஆறுமுகம் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு முத்துலட்சுமி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் முத்துலட்சுமி சமைப்பதற்காக கோழி இறைச்சி வெட்டி கொண்டிருந்தார். இதனை அடுத்து மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையான ஆறுமுகம் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். அப்போது கோபத்தில் ஆறுமுகம் இறைச்சி வெட்டுவதற்காக வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்துலட்சுமியை சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த முத்துலட்சுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துலட்சுமியின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆறுமுகத்தை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.