2021 ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசினை தான்சானியா நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னா பெற்றுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இயற்பியல், மருத்துவம், அமைதி, வேதியல், இலக்கியம் உள்ளிட்ட துறைகளில் சிறந்து விளங்கும் மனிதர்களுக்கு உலகின் உயரிய விருதாக கருதப்படும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது, அந்தவகையில் 2021 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களுக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது, அந்த வகையில் ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் நேற்று இலக்கியத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டது,
BREAKING NEWS:
The 2021 #NobelPrize in Literature is awarded to the novelist Abdulrazak Gurnah “for his uncompromising and compassionate penetration of the effects of colonialism and the fate of the refugee in the gulf between cultures and continents.” pic.twitter.com/zw2LBQSJ4j— The Nobel Prize (@NobelPrize) October 7, 2021
இதனை தான்சானியா நாட்டை சேர்ந்த எழுத்தாளர் அப்துல் ரசாக் குர்னா பெற்றுள்ளார். மருத்துவம், இயற்பியல், வேதியல் ஆகிய துறைகளுக்கு ஏற்கனவே நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்று இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. மேலும் இந்த பரிசினை ராயல் ஸ்வீடிஷ் அகாடமி நோபல் பரிசு தேர்வுக் குழு வெளியிட்டது. வளைகுடா நாடுகள் அகதிகள் குறித்து இவர் எழுதிய புத்தகத்திற்கு இந்த நோபல் பரிசு கிடைத்துள்ளது.