இந்த வருடத்தின் இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் ஒருவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகிலேயே மிக உயர்ந்த விருதாக கருதப்படும் நோபல் பரிசு நேற்று முதல் அறிவிக்கப்பட தொடங்கியுள்ளது. இந்த வருடத்திற்கான நோபல் பரிசு பட்டியலில் 211 தனிநபர்கள் மற்றும் 107 அமைப்புகள் என ஒட்டுமொத்தமாக 318 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில் இவ்வருடத்தின் இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் என்பவர் இலக்கியத் துறைக்கான நோபல் பரிசு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளார்.இவற்றைத் தொடர்ந்து நாளை அமைதிக்கான நோபல் பரிசு மற்றும் பத்தாம் தேதி பொருளாதார துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.