இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானோரை தேர்வு செய்வதற்கு குழு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “இலக்கிய மாமணி விருதுக்கு தகுதியானோரை தேர்வு செய்ய அமைச்சர் தங்கம் தென்னரசு தலைமையில் குழு அமைக்கப்படும்.
விருது பெறுபவருக்கு தலா 5 லட்சமும், ஒரு சவரன் தங்கப் பதக்கம், பாராட்டு பத்திரம் வழங்க ரூபாய் 17.10 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும். தமிழில் இயல், இசை, நாடகம் ஆகிய பிரிவுகளில் சிறந்து விளங்குவதற்கு ஜனவரி 15ஆம் தேதி கலைமாமணி விருது வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.