ரஷ்யா நடத்திய போரில் உக்ரைன் வீரர்கள் 1300 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யா உக்ரைன் மீது படை எடுத்து இன்று 19வது நாளாக தாக்குதல் நடத்திக் கொண்டிருக்கின்றது. உக்ரைனின் ராணுவ தளங்களை அழிப்பது மட்டுமே தனது இலக்காக வைத்து ரஷ்யா இந்த போரை தொடங்கியது. ஆனால் தற்போது குடியிருப்பு கட்டிடங்கள் பள்ளிக்கூடங்கள் மற்றும் ஆஸ்பத்திரிகள் என்று பல்வேறு இடங்களில் தனது தாக்குதல்களை ரஷ்ய படைகள் அதிகரித்து வருகின்றது.
இதுகுறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி செய்தியாளர்களிடம் கூறியதாவது “உக்ரைன் தலைநகர் கீவ்வை ரஷ்ய ராணுவ வீரர்கள் இன்று நெருங்கி விட்டனர். ரஷ்யா நடத்திய போரில் 1300 உக்ரைன் ராணுவ வீரர்களை கொல்லப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.