Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு அதிகமா உதவியது யார் தெரியுமா?…. வெளியான தகவல்…..!!!!!

வரலாறுகாணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டுக்கு அதிகமாக கடன் வழங்கியது இந்தியாதான் என தெரியவந்துள்ளது. இதனை இலங்கை நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. சென்ற ஜனவரி 1ஆம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை, இலங்கை நாட்டுக்கு மொத்தம் 96 கோடியே 88 லட்சம் டாலர் (ரூ.7 ஆயிரத்து 750 கோடி) வெளிநாட்டு கடன் கிடைத்துள்ளது.

இவற்றில் இந்தியா மட்டும் 37 கோடியே 69 லட்சம் டாலர் (ரூ.3 ஆயிரத்து 15 கோடி) கடன் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது மொத்தகடனில் 39 % ஆகும். இதையடுத்து அடுத்தபடியாக ஆசியவளர்ச்சி வங்கி, 35 கோடியே 96 லட்சம் டாலர் (ரூ.2 ஆயிரத்து 876 கோடி) கடன் வழங்கி 2-வது இடத்தை பிடித்துள்ளது. அதனை தொடர்ந்து அடுத்த இடத்தில் உலக வங்கி இருக்கிறது. சீனா, மொத்த கடனில் 7 % மட்டுமே அளித்துள்ளது.

Categories

Tech |