Categories
மாநில செய்திகள்

இலங்கைக்கு அனுப்பப்படும் அரசி…. தவறான தகவல் பரப்புவதா?…. தமிழக அரசு எச்சரிக்கை….!!!!

இலங்கையில் நிலவிவரும் வரலாறு காணாத கடும் பொருளாதார நெருக்கடியில் அத்தியாவசிய பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அதுமட்டுமல்லாமல் அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் இலங்கையில் தவித்து வரும் மக்களுக்கு தமிழகத்திலிருந்து உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள்,உயிர் காக்கும் மருந்துகள் அனுப்பி வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இதையடுத்து முதல் கட்டமாக தமிழகத்தில் இருந்து 40 ஆயிரம் டன் அரிசி, 500 டன் பால் பவுடர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால் அரிசிக்கான டெண்டர் கோரப்பட்டு ஆணைகள் தற்போது வழங்கப்பட்டுள்ள நிலையில் அரிசியை தமிழக அரசு அதிக விலைக்கு வாங்குவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் இதற்கு அமைச்சர் சக்கரபாணி விளக்கம் அளித்துள்ளார். அதில், 40 ஆயிரம் டன் அரிசி உள்ளிட்ட பொருட்களை இலங்கைக்கு அனுப்பி விடும் நடவடிக்கையை முதல்வர் தீவிரப் படுத்தி உள்ளார்.

அதன்படி இலங்கை அரசு ஏற்கனவே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து உள்ள அரிசிக்கு இணையான ஆந்திரா பொன்னி, ஏடிட்டி 45, கோ -51 போன்ற உயர் ரக அரிசி கொள்முதல் செய்யப்பட்டு 10 கிலோ பைகளில் அனுப்பப்பட உள்ளது. இந்நிலையில் சிலர் இந்திய உணவு கழகத்திடம் இருந்து கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய்க்கு வாங்காமல் அதிகமாக கொடுத்து வாங்கப் பட்டது போல் சமூக ஊடகங்களில் பொய்யான தகவல் பரப்பி வருகின்றனர். இது தவறான பொய் பிரசாரம் ஆகும். போக்குவரத்து செலவு மற்றும் பை உட்பட கிலோ ஒன்றிற்கு ரூ.33.50 என்ற குறைந்த விலையில் கொள்முதல் செய்ய ஆணை வழங்கப்பட்டுள்ளது. இந்த உண்மைகள் முழுமையாக தெரிந்திருந்தும் அவதூறு செய்ய வேண்டும் என்பதற்காகவே சிலர் இந்தப் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளனர். எனவே அவதூறு பரப்புவோர் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்க அரசு தயங்காது என்று அவர் எச்சரித்துள்ளார்.

Categories

Tech |