சர்வதேச நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார். இதனையடுத்து வாஷிங்டனில் உலக வங்கியின் தலைவர் டேவிட் மால்பாசை நேற்று சந்தித்து பேசினார். அப்போது கொரோனா மற்றும் உக்ரைன் போரால் உலக நாடுகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் மற்றும் பொருளாதார வீழ்ச்சி இதனால் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ள தாக்கம் குறித்து உரையாற்றினார்.
இந்த பெரும் தொற்று மற்றும் உக்ரைன் போரால் சில நாடுகள் சந்தித்து வரும் நிதி நெருக்கடியை சமாளிக்க அந்நாடுகளுக்கு உலக வங்கி உதவ வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். அதிலும் முக்கியமாக வரலாறு காணாத நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கையை மீட்க உலக வங்கியின் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.