Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு உதவும் இந்தியா…. ரூ. 5589.78 கோடி மதிப்பிலான எரிபொருள்…. கப்பல் மூலம் விநோயோகம்….!!!

பிரபல நாட்டிற்கு இந்தியா எரிபொருள் விநியோகம் செய்துள்ளது.

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவுவதால், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருள்களின் விலை உயர்ந்ததோடு, அத்தியாவசிய பொருள்களின் விலையும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி எரிபொருள் மற்றும் உணவு போன்ற அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. இந்த நிதி நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களை விலை கொடுத்து வாங்க முடியாத இக்கட்டான சூழ்நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக இலங்கைக்கு பல நாடுகள் உதவி கரம் நீட்டி வருகிறது. அந்த வகையில் இந்தியாவும் கப்பல் மூலமாக எரிபொருள், உணவு, உரம், கோதுமை உள்ளிட்ட பொருள்களை அனுப்பி வருகிறது. இந்நிலையில் இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் கடுமையான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தப் போராட்டத்தின் காரணமாக அதிபர் கோத்தப்பய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்கிரமசிங்கே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவருக்கு எதிராகவும் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இத்தகைய இக்கட்டான சூழ்நிலைகளில் கொழும்புவில் இருந்து இந்திய தூதர் கோபால் பாக்ளே செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அவர் இந்தியாவில் இருந்து ரூ.‌ 5589.78 கோடி மதிப்பிலான எரிபொருள் கப்பல் மூலமாக வந்தடைந்துள்ளது. அதன் பிறகு இலங்கை மக்களுடன் எப்போதும் இந்தியா துணை நிற்கும் எனவும், இலங்கை எங்களுடைய நெருங்கிய நண்பர் மற்றும் பங்குதாரர் எனவும் கூறியுள்ளார். மேலும் இலங்கையில் இருந்து பெரும் அவசரம் என்று உதவி கேட்ட போது நாங்கள் உடனடியாக ஓடி வந்து உதவி செய்துள்ளோம் எனவும் கூறியுள்ளார்.

Categories

Tech |