அமெரிக்காவில் இலங்கை நிதியமைச்சர் அலி சப்ரி, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். அப்போது இருதரப்பு பேச்சுவார்த்தையில் இலங்கை பொருளாதாரம் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நெருங்கிய நட்பு நாடு என்பதன் அடிப்படையில் இலங்கைக்கு முழு ஒத்துழைப்பும், உதவியும் வழங்க இந்தியா முயற்சி எடுக்கும் என்று இலங்கை நிதி அமைச்சரிடம் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளார்.
ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்து வரும் சர்வதேச நாணய நிதியம்-உலக வங்கி கூட்டத்தில் கலந்து கொண்டார். நெருங்கிய நட்பு நாடு என்பதாலும், அண்டை நாடு என்பதன் அடிப்படையிலும் இலங்கைக்கு அனைத்து ஒத்துழைப்பும், உதவியும் வழங்க இந்தியா முயற்சி எடுக்கும் என்று நிர்மலா சீதாராமன் உறுதியளித்துள்ளதாக டுவிட்டரில் நிதித்துறை பதிவிட்டுள்ளது.