இலங்கை அணிக்கு எதிரான ஒரு நாள் தொடரில் முதல் போட்டியில் இந்தியபெண்கள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியடைந்தது. இதையடுத்து 2வது ஒருநாள் போட்டி இன்றுகாலை துவங்கியது. அப்போது டாஸ் வென்ற இந்தியஅணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த வகையில் இலங்கை அணி பேட்டிங் செய்தது. பின் ஹசினி பெரேரா 0, விஷ்மி குணரத்னே 3, மாதவி 0 என 11 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து இலங்கை அணியானது தடுமாறியது.
அதனை தொடர்ந்து கேப்டன் அதபத்து-அனுஷ்கா ஜோடி நிதானமாக ஆடி ரன்களை கணிசமாக அதிகரித்தனர். நிதானமாக விளையாடிய கேப்டன் அதபத்து 27 ரன்னிலும், அனுஷ்கா சஞ்சீவனி 25 ரன்னிலும், கவிஷா தில்ஹாரி 5 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். அப்போது இலங்கை அணியானது 6 விக்கெட்டுகளை இழந்து 81 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது. இந்நிலையில் 7வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த நிலாக்ஷி டி சில்வா-காஞ்சனா ஜோடி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
நிலாக்ஷி டி சில்வா 32 ரன்கள் எடுத்திருந்த சூழ்நிலையில், மேக்னாசிங் ஓவரில் வெளியேறினார். அடுத்துவந்த ஓஷதி ரணசிங்கே 10 ரன்னில் அவுட்டானார். இறுதிவரை ஆட்டம் இழக்காமல் இருந்த காஞ்சனா 47 ரன்கள் எடுத்தார். இதன் காரணமாக 50 ஓவர் முடிவில் இலங்கை அணியானது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 173 ரன்கள் எடுத்தனர். இந்தியஅணி தரப்பில் ரேணுகா சிங் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.