Categories
உலகசெய்திகள்

இலங்கைக்கு கடன் வழங்க ஒப்புதல்…. ரூ. 23 கோடியை வழங்கிய சர்வதேச நிதிய குழு…. வெளியான தகவல்….!!!!!

சர்வதேச நிதிய குழுமம் கடன் வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

இலங்கை நாட்டில் அந்நிய செலவாணி பற்றாக்குறை காரணமாக வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த பொருளாதார நெருக்கடியின் காரணமாக அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதன் காரணமாக சர்வதேச நிதிய குழுவிடம் இலங்கை அரசு கடன் உதவி கேட்டுள்ளது. இதன் காரணமாக சர்வதேச நிதிய குழு இலங்கைக்கு வந்துள்ளது.

கடந்த மாதம் 24-ஆம் தேதி முதல் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், 2-ம் கட்ட பேச்சு வார்த்தையும் நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து இன்றுடன் பேச்சு வார்த்தை நிறைவடைந்ததையடுத்து சர்வதேச நிதிய குழு இலங்கை அரசுக்கு கடன் கொடுப்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி 23 ஆயிரம் கோடி ரூபாயை கடனாக நான்காண்டு கால ஒப்பந்தத்தின் அடிப்படையில் சர்வதேச நிதிய குழு வழங்குகிறது. மேலும் இலங்கை 40 கோடி கடன் கேட்டிருந்த நிலையில், 22 கோடி ரூபாய் சர்வதேச நிதியக்குழு வழங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |