Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

இலங்கைக்கு தப்பிசென்ற அகதிகள்… 4 மீனவர்கள் கைது… கியூ பிரிவு போலீஸ் விசாரணை…!!

சட்ட விரோதமாக 3 அகதிகளை இலங்கைக்கு அனுப்பி வைத்த 4 மீனவர்களை கியூ பிரிவு காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பாம்பன் கடற்கரை பகுதியில் கியூ பிரிவு இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர். இந்நிலையில் முந்தல்முனை கடற்கரை பகுதியில் நாட்டுப்படகு ஒன்றில் 4 மீனவர்கள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர். இதனை பார்த்த காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

அந்த விசாரணையில் அவர்கள் அக்காள் மடத்தை சேர்ந்த தேசிங்குராஜன், சிபிராஜ், ஈஷா, சீமோன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து நேற்று 3 அகதிகள் சட்ட விரோதமாக இலங்கைக்கு செல்வதற்கு இவர்கள் 4 பேரும் உதவியது தெரியவந்துள்ளது. மேலும் இவர் நாட்டுப்படகு மூலம் 3 அகதிகளை ஏற்றிக்கொண்டு தனுஷ்கோடி நடுக்கடலில் உள்ள 2வது மணல்திட்டு பகுதியில் படகை நிறுத்திவிட்டு, இலங்கையில் இருந்து பிளாஸ்டிக் படகில் வந்தவர்களுடன் 3 அகதிகளை அனுப்பி வைத்துள்ளனர்.

இதற்காக அவர்களிடம் இருந்து 80,000 ரூபாய் பணத்தையும் பெற்றுள்ளனர். இதனையறிந்த கியூ பிரிவு காவல்துறையினர் வழக்குபதிவு செய்து 4 மீனவர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்த நாட்டுபடகையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் இலங்கைக்கு தப்பி சென்ற அகதிகள் ஏதேனும் பொருட்களை கடத்தி சென்றுள்ளார்களா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |