Categories
உலக செய்திகள்

இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவாக இருக்கிறோம்… இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கை…!!!!!!

இலங்கை வரலாறு காணாத பொருளாதார சிக்கலில் தவித்து வருகின்றது. இலங்கைக்கு இந்தியா கடன் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில் இலங்கைக்கு அதிகமாக நிதி உதவிகளை அளித்த நாடு இந்தியா ஆகும். ஆனால் இலங்கைக்கு இந்தியா இனிமேல் நிதி உதவி அளிக்காது என தகவல்கள் வெளியாகி வருகிறது. இதற்கு கொழும்பு நகரில் உள்ள இந்திய தூதரகம் நேற்று மறுப்பு தெரிவித்திருக்கிறது. இது பற்றி இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, இலங்கை மக்கள் சந்தித்து வரும் பொருளாதார சிக்கலில் இருந்து மீள்வதற்காக இலங்கைக்கு முன் எப்போதும் இல்லாத அளவிற்கு  ஒரு கோடி டாலர் இருதரப்பு உதவியை இந்தியா வழங்கி இருக்கிறது. மேலும் இதர நட்பு நாடுகளிடமும் இலங்கைக்கு உதவுமாறு இந்தியா வற்புறுத்தி இருக்கிறது.

இந்த நிலையில் இலங்கைக்கு சாத்தியமான எல்லா வழிகளிலும் இந்தியா தொடர்ந்து ஆதரவாக இருக்கிறது. பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக இலங்கையின் முக்கிய பொருளாதாரத் திட்டங்களில் நீண்டகால முதலீடுகளை செய்திருக்கிறது. அது மட்டும் அல்லாமல் இலங்கையில் 350 கோடி டாலர் மதிப்புள்ள இரு தரப்பு மேம்பாட்டு ஒத்துழைப்பு திட்டங்கள் மேற்கொண்டு வருகின்றன. இலங்கையை சேர்ந்தவர்கள் இந்தியாவின் முன்னணி கல்வி நிறுவனங்கள் உயர் கல்வி மற்றும் திறன் பயிற்சி மேற்கொள்ள கல்வி உதவி தொகை பெற்று வருகின்றார்கள். இத்தகைய ஒத்துழைப்புகளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு உதவி வருகின்றன என இந்தியா தூதரகம் தெரிவித்துள்ளது.

Categories

Tech |