பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டிற்கு தமிழக அரசின் சார்பாக நிதி உதவி வழங்கப்படும் என கடந்த ஏப்ரல் மாதம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.இதனைத் தொடர்ந்து தனது குடும்பத்தின் சார்பில் 50 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்குவதாக முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் அப்போது அறிவித்தார்.
இந்நிலையில் சட்டசபையில் அளித்த வாக்குறுதியின் படி தனது மூத்த மகன் ரவீந்திரநாத் மற்றும் இளைய மகன் ஜெயப்பிரதீப் வங்கி கணக்கில் இருந்து தலா 25 லட்சம் என மொத்தம் 50 லட்சத்திற்கான வரை ஓலைகளை நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளருக்கு பன்னீர்செல்வம் நேற்று அனுப்பி வைத்தார் m