பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் இலங்கை அதிலிருந்து மீளுவதற்கு முழு முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றது. இலங்கைக்கு இந்தியா கடன் உதவியும் அளித்து வருகின்றது. இந்நிலையில் இலங்கைக்கு இரண்டு ராணுவ விமானங்களை இந்தியா பரிசாக வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இலங்கையின் முன்னாள் வெளியுறவுத்துறை மந்திரி பிரிஸ், இந்திய வெளியுறவுத்துறை மந்திரி டாக்டர் ஜெய்சங்கர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அப்போது இந்தியாவின் டார்னியர் ராணுவ விமானத்தை இலங்கைக்கு வழங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதில் இரண்டு ராணுவ விமானங்களை கொடுப்பது என்று முடிவு செய்யப்பட்டது. இன்னும் ஓரிரு நாட்களில் இரண்டு டானியர் 228 ராணுவ விமானங்களை இந்தியா இலங்கையிடம் ஒப்படைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வரும் 15ஆம் தேதி 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் சூழலில் அதற்கு முன்னதாகவே இந்த விமானத்தை இலங்கைக்கு பரிசாக வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.