இலங்கை சந்தித்துவரும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து இலங்கையைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா பேட்டியளித்துள்ளார். “மக்கள் இவ்வாறு வாழ முடியாது. எனவே மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் அவர்கள் போராட்டம் நடத்த முன் வந்துவிட்டனர். எரிபொருள் தட்டுப்பாடு உணவு தட்டுபாடு 12 மணிநேரம் வரை மின்சார தட்டுப்பாடு என இலங்கை இதுவரை சந்திக்காத இன்னல்களை எல்லாம் சந்தித்து வருகிறது.
என்னுடைய சொந்த மக்கள் அவர்களுடைய சொந்த அரசாங்கத்திற்கு எதிராக போராடுவது கண்டு நான் மன வேதனை அடைகிறேன். உண்மையாக மக்கள் தாங்கள் உணர்வுகளை அரசிடம் கூறும் போராட்டம் தான் இது. முன்னதாக இலங்கை மக்களுக்கு தங்கள் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை இருந்தது. ஆனால் கடந்த மூன்று மாதங்களாக மக்கள் அரசாங்கத்தின் மீது இருந்த நம்பிக்கையை இழந்துள்ளனர்.