Categories
உலக செய்திகள்

இலங்கையிலிருந்து புறப்பட்ட சீன உளவு கப்பல்…. நிம்மதி பெருமூச்சு விட்ட இந்தியா…..!!!!

சீனா உலக கப்பல் “யுவான் வாங் 5”  222 மீட்டர் நீளமும், 26 மீட்டர் அகலமும் கொண்டது. 750 கி.மீ. வரை கண்காணிக்கும் இந்த உளவு கப்பலில் விண்வெளி ஆய்வு கருவிகள் உள்ளன. விண்வெளியில் இயங்கும் செயற்கை கோள்களையும், வானில் செலுத்தப்படும் ஏவுகணைகளையும் இந்த கப்பலால் கண்காணிகக் முடியும். இருக்கும் இடத்தில் இருந்து 750 கி.மீ. தொலைவில் உள்ள இடங்களை கண்காணிக்க முடியும்.

இந்த கப்பல் கடந்த 16ஆம் தேதி இலங்கை அம்பன்தோட்டை துறைமுகத்துக்கு வந்தது. இந்த அதிநவீன உளவு கப்பல் தென்னிந்தியா முழுவதையும் உளவு பார்க்கும் திறன் கொண்டதால் இந்திய கடற்படை கண்காணிப்பை தீவிர படுத்தியது. இந்நிலையில் எரிபொருள் மற்றும் உணவுப் பொருள்கள் தேவையைபூர்த்தி செய்ததை தொடர்ந்து சீனாவின் உணவு கப்பல் இலங்கையில் இருந்து நேற்று புறப்பட்டது.

Categories

Tech |