இலங்கையில் கடும் பொருளாதாரம் நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. இதனால் மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அதிபர் கோத்தபயா ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்தி வருகின்றனர். இதற்கிடையில் ஆயிரக்கணக்கான மக்கள் நேற்று இலங்கை அதிபர் மாளிகை முன் குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டினர். அதன் பிறகு கொழும்புவில் உள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் வீட்டை அடித்து நொறுக்கினார். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன் கோத்தபயா குடும்பத்துடன் தப்பித்து சென்று ஓடிவிட்டார். இதனையடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தனது பதிவியை ராஜினாமா செய்தார்.
அதனைப் போல அதிபர் கோத்தபாய ராஜபக்சே தனது பதிவியை வரும் 13 ஆம் தேதி ராஜினாமா செய்வார் என்று நாடாளுமன்ற சபாநாயகர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாட்சி அமைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கையில் எதிர்க்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சிறப்புகூட்டம் இன்று கூடுகிறது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான கூட்டணி அங்கம் வகிக்கும் கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்க உள்ளது. கூட்டாட்சியில் தங்களின் பங்களிப்பு குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்புகளுக்கு ஆலோசனை நடைபெற்று வருகிறது. மேலும் இன்று நடைபெற உள்ள இந்த கூட்டத்தில் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டாட்சி அமைக்க வாய்ப்பு உள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது.