இலங்கை மக்கள் பொருளாதார நெருக்கடியால் அவதியுற்று வரும் நிலையில் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை அரங்கேற்றி வருகின்றன. அந்த வரிசையில் இளைஞர் ஒருவர் கோட்டாபய ஆட்சிக்கு எதிராக கொட்டும் மழையில் உடல் நடுங்க போராட்டம் நடத்தும் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் அனைவரும் கோட்டாபய பதவி விலக வேண்டுமென கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இளைஞர் ஒருவர் இவ்வாறு கொட்டும் மழையில் உடல் நடுங்க போராட்டம் நடத்துவது இலங்கை மக்களின் மனநிலையை பிரதிபலிக்கிறது என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
State of the people of #lka pic.twitter.com/0iLtSLM8pT
— ShαdE X 🇵🇸 (@4shade17) April 5, 2022