Categories
உலக செய்திகள்

இலங்கையில் இடைக்கால அரசு…. பேரணியாக வீதியில் இறங்கிய முன்னாள் அதிபர்….!!!!

இலங்கை விடுதலை கட்சியின் தலைவரும், முன்னாள் அதிபருமான மைத்ரிபால சிறிசேனா இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் பொலன்னருவா பகுதியில் தொழிலாளர் தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பேரணி ஒன்றை நடத்தினார். அதில் பேசிய அவர், “நாடு முழுவதும் அரசியல் ஊழியர்கள், பணக்காரர்கள் முதல் விவசாயிகள் வரை அனைவரும் வீதியில் இறங்கி பொருளாதார நெருக்கடிக்கு எதிராக போராடி வருகின்றனர். எனவே நானும் தொழிலாளர் தினத்தன்று வீதியில் இறங்கியுள்ளேன். இலங்கையில் ஒரு புது அரசு அமைய வேண்டும் என்பதே எனது விருப்பம். அதனை நாங்கள் செய்வோம்” என்று கூறியுள்ளார்.

இதற்கிடையே இலங்கை அரசு பொருளாதார நெருக்கடியை சமாளிக்க சர்வதேச நிதி நிறுவனங்கள் மற்றும் உலக நாடுகளின் உதவியை நாடி வருகிறது. அதேசமயம் ராஜபக்சே அரசு தங்கள் இன்னல்களுக்கு தீர்வு காண வழியில்லாமல் இருப்பதால் பொதுமக்களும், எதிர்கட்சிகளும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் புத்த மத அமைப்புகளும் பிரதமர் மகிந்த ராஜபக்சே பதவி விலக வேண்டும், இலங்கையில் இடைக்கால அரசு அமைக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கியுள்ளனர். புத்தமத தலைவர்களில் ஒருவரான அகலக்கடா சிறிசுமனா இலங்கையில் இடைக்கால அரசு அமைக்கப்படாவிட்டால் அரசுக்கு எதிராக மத ஆணை பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்துள்ளார்.

Categories

Tech |