இலங்கையில் ஏற்பட்டுள்ள கோதுமை மாவு தட்டுப்பாட்டின் காரணமாக அனைத்து பேக்கரிகளையும் மூடும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை மக்கள் மிகப்பெரிய புரட்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் அலுவலகம் போன்ற அரசு கட்டிடங்களை சூறையாடி உள்ளனர். இதனால் ராஜபக்சே குடும்பத்தினர் அரசாங்க பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர். மேலும் அதிபராக இருந்த கோதபய ராஜபக்சே வெளிநாட்டிற்கு தப்பி சென்றுள்ளார். இந்த நிலையில் இலங்கையில் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே கடந்த 21 ஆம் தேதி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கையில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அரசு அமைந்தாலும் அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிரான போராட்டம் பல்வேறு இடங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்த சூழலில் இலங்கையில் கோதுமை மாவு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாட்டின் காரணமாக தலைநகர் கொழும்புவில் 2000 பேக்கரிகள் மூடப்பட்டிருக்கிறது. மேலும் யாழ்ப்பாணத்தில் எல்லா பேக்கரி கடைகளும் மூடும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் இலங்கை மக்களின் காலை உணவாக பிரட் சாப்பிடுவதாக கூறப்படுகின்றது. மேலும் ஒரு பாக்கெட் பிரெட் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கோதுமை மாவு தட்டுப்பாட்டின் காரணமாக இலங்கை சந்தையில் எதிர்காலத்தில் ரொட்டி ஒன்றின் விலை 300 ரூபாய் வரை அதிகரிக்க கூடும் என்று கூறப்படுகின்றது. 50 கிலோ கிராம் நிறையுடைய கோதுமை மாவு மூடை ஒன்றின் விலை தற்போது 20,000 ரூபாயாக அதிகரித்து இருக்கிறது.