இலங்கை நாட்டில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ள சூழ்நிலையில் இன்று முதல் ஒரு வாரத்திற்கு பங்குச்சந்தை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கடன்களை தற்காலிகமாக திருப்பிச் செலுத்தப்போவதில்லை என்று இலங்கை சென்ற வாரம் அறிவித்திருந்தது. இந்த நிலையில் பங்குச்சந்தையானது தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வந்தது. இந்நிலையில் இன்று முதல் 22ஆம் தேதி வரை கொழும்பு பங்குச்சந்தையில் வர்த்தகம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக இலங்கை பங்கு பரிவர்த்தனை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.