Categories
உலக செய்திகள்

இலங்கையில் உள்ள இந்தியர்களுக்கு…. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

இலங்கை நாட்டில் விலைவாசி உயர்வு, உணவு, எரிப்பொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் பற்றாக்குறை போன்றவற்றை தொடர்ந்து கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. நிதிநெருக்கடியால் உணவு, மருந்து மற்றும் எரிப்பொருள் போன்றவற்றை இறக்குமதி செய்யவோ, விலை கொடுத்து வாங்கவோ முடியாத நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டது. சுதந்திரம் பெற்றதிலிருந்து இதுவரையிலும் இல்லாத அடிப்படையிலான எரிப்பொருள் பற்றாக்குறையால் அந்நாடு சிக்கிதவித்து வருகிறது. இந்த சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா ஆதரவு கரம் நீட்டியுள்ளது. கோதுமை உட்பட உணவு பொருட்கள், உரம் ஆகியவற்றை தீவுநாடான இலங்கைக்கு கப்பலில் அனுப்பி வருகிறது.

இருப்பினும் இலங்கையில் நெருக்கடியான சூழ்நிலை நிலவி வருகிறது. அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியான சூழலால் மக்கள் பல்வேறு மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதாவது அதிபர் கோத்தபயராஜபக்சே அரசுக்கு எதிராக அவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். கொழும்புவிலுள்ள அதிபர் கோத்தபயா வீட்டிற்குள் நுழைந்த போராட்டக்காரர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர். இதனிடையில் போராட்டக்காரர்கள் வருவதற்குள் கோத்தபயா தன் குடும்பத்துடன் தப்பிவிட்டார். கோத்தபயா தன் குடும்பத்துடன் மாலத்தீவுக்கு சென்ற 13ஆம் தேதி ராணுவ விமானத்தில் தப்பிசென்றார். அதன்பின் மாலத்தீவில் இருந்தபடியே சிங்கப்பூருக்கு சென்றார். அந்த நாட்டில் பலவார போராட்டங்களுக்கு பின், சென்ற வியாழக்கிழமை இலங்கை அதிபர் பதவியிலிருந்து கோத்தபய ராஜபக்சே விலகினார்.

அதனை தொடர்ந்து இடைக்கால அதிபராக பிரதமர் ரணில் விக்ரம சிங்கே சென்ற வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றார். எனினும் அவரும் பதவிவிலக கோரி நாடெங்கும் போராட்டங்கள் நடைபெறுகிறது. இந்த நிலையில் இலங்கையில் அவசர நிலையை பிறப்பிப்பதற்கான உத்தரவை இடைக்கால அதிபர் ரணில் நேற்று முன்தினம் காலை வெளியிட்டார். இலங்கை நாட்டில் புது அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான பணிகள் ஒரு புறம் நடந்து வருகிறது. அதன்பின் புது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் இலங்கை நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறுகிறது. இச்சூழலில் கொழும்பு நகரிலுள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்தியில், இலங்கையில் இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலையில் இங்கிருக்கும் இந்தியர்கள் சமீபத்திய முன்னேற்றங்கள் குறித்த விவரங்களை பற்றி தொடர்ந்து அறிந்துகொண்டு, பின் தங்களது பயணம் மற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி கேட்டுகொள்ளப்படுகின்றனர் என அறிவுறுத்தி இருக்கிறது. தேவைப்பட்டால் கொழும்புவிலுள்ள இந்திய தூதரகத்தினை இந்தியர்கள் தொடர்புகொள்ளலாம் என தெரிவித்துள்ளது.

Categories

Tech |