Categories
உலக செய்திகள்

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி… ஐ.நா சார்பில் ரூ.11 கோடி நிதி உதவி…. வெளியான அறிக்கை…!!!!!

இலங்கையில் பல மாதங்களாக நீடித்து வரும் பொருளாதார நெருக்கடியை சமாளிப்பதற்காக உலக நாடுகள் மற்றும் பல்வேறு சர்வதேச அமைப்புகளும் உதவி வருகிறது. அதிலும் குறிப்பாக விலைவாசி உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் கூட கிடைக்காமல் சிக்கித் தவித்து வரும் ஏழை குடும்பங்களுக்கு ஐ.நா போன்ற அமைப்புகள் நேரடியாக உதவிகளை வழங்குகிறது. ஐ.நா-வின் உணவு மற்றும் வேளாண் அமைப்பு சார்பாக 47 ஆயிரத்து 69 விவசாய குழு குடும்பங்களுக்கு ஏற்கனவே 2300 டன் உரம் வழங்கப்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து பின் தங்கிய 15,000 குடும்பங்களுக்கு பணமாகவே 1.4 மில்லியன் டாலர் வழங்கப்பட்டிருப்பதாக எஃப்.ஏ.ஒ கூறியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் இந்த மாதம் வரை பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கைகளின் அறிக்கையில் இது வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “இலங்கை வரலாறு காணாத அளவு நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் இலங்கையின் மக்கள் தொகை சுமார் 40 சதவீதத்தினர் விவசாயத்தை முதன்மை வருமான ஆதாரமாக நம்பி உள்ளனர்.

அதனால் உரங்கள் மற்றும் பிற அத்தியாவசிய உற்பத்தி உள்ளீடுகள் கிடைக்காத காரணத்தினால் 2021- ஆம் வருடத்தின் நடுப்பகுதியில் இருந்து விவசாய உற்பத்தி சரிவடைந்து வருகிறது.  கால்நடை பராமரிபராமரிப்பாளர்களால் தீவனம் மற்றும் அடிப்படை கால்நடை பொருட்களை வாங்க முடியவில்லை. மேலும் மீனவர்கள் மோட்டார் பொருத்தப்பட்ட படங்களுக்கு எரிபொருள் கிடைக்கவில்லை. இதனால் மேற்படி  தேவைகளில் இருப்பவர்களுக்கு பல்வேறு விதமாக உதவிகள் வழங்கப்பட்டு இருக்கிறது” என அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |