இலங்கையில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக சிறைபிடிக்கப்பட்ட தமிழகம் மீனவர்கள் 9 பேரும் இன்று சென்னை வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 43 மீனவர்கள் கடந்த டிசம்பர் மாதம் அன்று இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டனர். அதுமட்டுமல்லாமல் கடந்த மாதம் புதுக்கோட்டை மீனவர்கள் 13 பேர் உட்பட 56 மீனவர்கள் சிறை பிடிக்கப்பட்டனர்.
இதில் 47 நபர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த 6 மீனவர்களும், புதுக்கோட்டையைச் சேர்ந்த 3 மீனவர்களும் இன்று விமானம் மூலமாக சென்னை வந்து சேர்வார்கள் என்று பாதுகாப்புப் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.