இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதற்கிடையில் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றை வாங்க முடியாமல் மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் ராஜபக்சே அரசுக்கு எதிராக தொடர் போராட்டம் நடந்து வருகிறது. சென்ற 9ஆம் தேதி தொடங்கிய தெருமுனை போராட்டம், நேற்று 4-வது நாளாக நீடித்தது. அதிபர் அலுவலகம் எதிரில் நேற்றும் போராட்டம் நடைபெற்றது.
இந்நிலையில் 5-வது நாளை இலங்கை அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருபவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என அந்நாட்டு பிரதமர் மகிந்த ராஜபக்சே அறிவித்துள்ளார். முன்பாக ராஜபக்சே சகோதரர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகள் அதிகரித்து வரும் சூழ்நிலையில், கடந்த சில வாரங்களில் இலங்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு அமைதியின்மை ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.