பொருளாதாரத்தில் கடும் பின்னடைவை சந்தித்துள்ள இலங்கை தற்போது அரசியல் நெருக்கடியான சூழ்நிலையையும் சந்தித்து வருகிறது. ஏற்கனவே அடுத்தடுத்து பெறப்பட்ட ராஜினாமா கடிதங்களால் இலங்கையின் பல பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில் தற்போது கருவூலத்துறை செயலாளரின் பதவி விலகலும் நிகழ்ந்துள்ளது. அதிபர் கோத்தபய ராஜபக்சே தன்னுடைய சகோதரரான பசில் ராஜபக்சேவை நிதிதுறை அமைச்சர் பதவியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அவருடைய பணிகளை நிதித்துறை செயலாளர் அலிசாப்ரி செய்துவந்தார். இந்நிலையில் தற்போது அலிசாப்ரியும் ராஜினாமா செய்துள்ளார். இந்நிலையில் கருவூலத் துறை செயலாளராக இருந்த எஸ்.ஆர் அட்டிகாலவும் தன்னுடைய ராஜினாமா கடிதத்தை அதிபருக்கு அனுப்பி வைத்துள்ளார்.