இலங்கையில் சமையல் கேஸ் கிடைக்காததால் மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இலங்கையில் சமையல் கேஸ்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருவதால் அங்கு இருக்கின்ற மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டிருக்கிறது. தலைநகர் கொழும்பை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை 3:00 மணி முதலே மக்கள் சமையல் கேஸ் வாங்க காத்திருக்கின்றார்கள். இருப்பினும் ஒரு சிலருக்கு மட்டுமே சமையல் கேஸ் கிடைப்பதாக கூறப்படுகிறது.
மேலும் ஒரு சிலர் நீண்ட தூரம் பயணம் செய்து அதிக விலை கொடுத்து சமையல் கேஸ்களை வாங்கி வருகிறார்கள். சமையல் கேஸ் தட்டுப்பாடு காரணமாக உணவகங்கள் மூடப்பட்டு வருகிறது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமங்களுக்கு ஆளாகியுள்ளனர்.