இலங்கையில் நிலவி வரும் பொருளாதார தட்டுப்பாட்டால் எரிபொருள் தட்டுப்பாடு மிகப்பெரும் பிரச்சினையாக மாறியுள்ளது. பெட்ரோல், டீசல் விலை கடுமையான உயர்வை சந்தித்திருக்கின்றது. ஒரு லிட்டர் பெட்ரோல் 470 ரூபாய் டீசல் ரூபாய் 400 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு பக்கம் தட்டுப்பாடு மற்றொரு பக்கம் விலை உயர்வு என இருமுனை தாக்குதலால் மக்கள் மிகுந்த கோபத்தில் இருக்கின்றனர். அதுமட்டுமல்லாமல் மணிக்கணக்கில் காத்து கிடக்க வேண்டியிருக்கின்றது.
இதன் காரணமாக பொதுமக்கள் சில்லறை பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு மிரட்டல் விடுத்ததால் மக்கள்தொகை அதிகமாக இருக்கும் மாவட்டங்களில் 40 சிலரை பெட்ரோல் விற்பனை நிலையங்கள் மூடப்பட்டிருப்பதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத்தை சேர்ந்த சாந்தா சில்வா தெரிவித்திருக்கின்றார். மேலும் கொழும்பு நகரில் 50 ஆயிரம் லிட்டர் எரிபொருள் விலை பருகுவதற்கு சில்லரை விற்பனை நிலையம் மேற்கொண்ட முயற்சி முறியடிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தி ஒட்டுமொத்த இருப்பையும் விலை உயர்வுக்கு முந்தைய பழைய விற்பனை செய்ய உத்தரவிட்டு இருக்கின்றனர்.