இலங்கையில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என பிரபல நாடு வலியுறுத்துள்ளது.
இலங்கையில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அத்யாவசிய பொருள்களின் விலை அனைத்தும் அதிகரித்து மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். அதுமட்டுமின்றி மின் தட்டுப்பாடு மற்றும் எரிபொருள் தட்டுப்பாடு போன்ற பிரச்சனைகளும் இருக்கிறது. இதன் காரணமாக ஆத்திரமடைந்த இலங்கை பொதுமக்கள் மிகப்பெரிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்தப் போராட்டத்தின் போது போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தது சூறையாடியதோடு, ரணில் விக்ரமசிங்கே வீட்டிற்கும் தீ வைத்தனர். இந்த சம்பவத்தால் இலங்கையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்கா தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் இலங்கையில் நிலவும் அரசியல் பிரச்சனைகளுக்கு உடனடியாக தீர்வு காண வேண்டும். அதோடு பொருளாதார நெருக்கடிக்கும் உடனடியாக தீர்வு காண வேண்டும. அந்த தீர்வானது நீண்ட காலம் பலன் தரும் வகையில் இருக்க வேண்டும் என கூறியுள்ளது.