Categories
உலகசெய்திகள்

இலங்கையில் நிலவும் போராட்டம்… போலீசார் துப்பாக்கிச்சூடு… ஒருவர் உயிரிழப்பு…!!!!!!

இலங்கை கேகாலை மாவட்டம் ரம்புக்கன பகுதியில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றது. பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் போன்ற பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர். மின்சாரத் தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. மேலும் உணவு மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக்கோரி, அவரது அலுவலகம் எதிரே ஒரு வாரத்திற்கும் மேலாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அந்தவகையில் இலங்கையின் கோகாலை  மாவட்டம் ரம்புக்கன பகுதியில் இலங்கை அரசுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைக்க போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார். மேலும் பலர் காயமடைந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது, கும்பலாக சிலர் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். போலீசார் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தினார்கள்.  இதனால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியானார் என கூறியுள்ளனர்.

Categories

Tech |