Categories
உலக செய்திகள்

இலங்கையில் நீடிக்கும் நெருக்கடி!… குறைந்தது பெட்ரோல், டீசல் விலை…. வெளியான தகவல்….!!!!!

இலங்கை நாட்டில் கடும் அந்நியச்செலாவணி பற்றாக்குறையின் காரணமாக நாட்டில் எரிப்பொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களின் இறக்குமதியானது தடைபட்டது. இதனால் அந்நாடு கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. மேலும் அங்கு கடும் எரிப்பொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு கிடைக்காமல் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்த எரிப்பொருள் தட்டுப்பாட்டால் மின்உற்பத்தி பாதிப்பு, போக்குவரத்து முடக்கம் ஆகிய சிரமங்கள் ஏற்பட்டு இருக்கிறது.

அங்கு பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் மற்றும் கியாஸ் நிரப்பும் நிலையங்களில் போதுமான அளவிற்கு இருப்பு இல்லாததால் மக்கள் நீண்ட வரிசையில் நாள்கணக்கில் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. எரிப்பொருள் வாங்குவதற்காக மக்கள் வரிசையில் நிற்கும்போது பல வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளது. எரிப்பொருள் வாங்க வரிசையில் தொடர்ந்து பல்வேறு நாட்கள் காத்துக்கிடந்ததால், கிட்டத்தட்ட 20 பேர் சோர்வு காரணமாக இறந்திருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் அந்நாட்டின் சிலோன்பெட்ரோலியம் கார்ப்பரேஷனானது  பெட்ரோல், டீசல் விலைகளை தலா20.ரூ குறைத்துவிட்டது. சென்ற பிப்ரவரி முதல் 5 முறை விலை உயர்வுக்கு பின் தற்போது விலை குறைந்து உள்ளது. அந்த வகையில் குறைக்கப்பட்ட பெட்ரோல்-டீசல் விற்பனையானது நேற்றிரவு 10.00 மணிமுதல் நடைமுறைக்கு வந்திருக்கிறது. இறுதியாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையானது மேமாத இறுதியில் ரூபாய்.50 மற்றும் 60 ஆக அதிகரிக்கப்பட்டது.

Categories

Tech |